என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் பள்ளி- ஐ.டி.ஐ. மாணவர்கள் மோதல்: 8 பேரிடம் விசாரணை
- பாதை வழியாக நடந்து செல்வதில் மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- காயம்பட்ட மாணவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அரசு தொழிற்கல்வி மையம்(ஐ.டி.ஐ.) மற்றும் அரசு பள்ளிகள் அருகருகே உள்ளது. இங்கு பின்புறம் உள்ள பாதை வழியாக நடந்து செல்வதில் மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் அங்கு படிக்கும் மாணவர்கள் 2 குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர், பின்னர் அது கை கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காயம்பட்ட மாணவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவர்கள் 4 பேர், தொழிற்கல்லூரி மாணவர்கள் 4 பேர் 8 மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






