என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமழிசை டாஸ்மாக் குடோனில் லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டம்
- பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் டாஸ்மாக் கிடங்கு செயல்பட்டு வருகிறது.
- லாரிகளில் ஏற்றப்பட்ட டாஸ்மாக் மதுபானங்கள் மதுபான கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருமழிசை:
பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் டாஸ்மாக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினந்தோறும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 4 மாதங்களாக ஒப்பந்த முறையில் செயல்படும் லாரிகளுக்கு ரூ.4 கோடிக்கு மேல் நிலுவை பாக்கி இருப்பதால் வாகனங்களை இயக்காமல் லாரிகளை நிறுத்தி அதன் உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டாஸ்மார்க் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து தற்காலிக வாபஸ் பெற்றனர்.
இதையடுத்து லாரிகளில் ஏற்றப்பட்ட டாஸ்மாக் மதுபானங்கள் மதுபான கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைபோல் டாஸ்மாக் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் உரிய சம்பளம் கொடுக்கவில்லை என அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






