search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாம்பரம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மின்கம்பியில் குதித்து வாலிபர் நூதன முறையில் தற்கொலை
    X

    தாம்பரம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மின்கம்பியில் குதித்து வாலிபர் நூதன முறையில் தற்கொலை

    • போலீஸ், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மின்கம்பியில் தொங்கிக் கொண்டு இருந்த டேனியலை மீட்டனர்.
    • வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரம்:

    சென்னை மேற்கு தாம்பரம் மாந்தோப்பு என்ற பகுதியை சேர்ந்தவர் டேனியல் (23). இவர் வீட்டில் குடும்பப் பிரச்சினை காரணமாக, சண்டை போட்டு விட்டு, பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் உள்ள, அவரது நண்பர் மணிகண்டன் என்பவர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில், மணிகண்டன் வீட்டில் முதல் மாடியில் இருந்து, நண்பர்கள் டேனியலும் மணிகண்டனும், மது அருந்தி உள்ளனர். அப்போது மணிகண்டன் நண்பர் டேனியலுக்கு அறிவுரை கூறி, நீ வீட்டிற்கு செல்வது நல்லது என்று கூறியுள்ளார். ஆனால் டேனியல், "நான் வீட்டிற்கு செல்ல மாட்டேன், செத்தாலும் சாவேன்" என்று கூறியுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11:30 மணி அளவில் டேனியல், நண்பரின் வீட்டு முதல் மாடியில் இருந்து, அருகே தெருவில் உள்ள மின் கம்பிகள் மீது திடீரென குதித்தார். அதில் மின்கம்பியில் சிக்கி, மின்சாரம் தாக்கி துடிதுடித்துக் கொண்டு கிடந்தார். அதை அந்தத் தெரு மக்கள் பதற்றத்துடன் பார்த்து,பெண்கள் கதறி அழுது கூக்குரல் இட்டனர். இதை அடுத்து நள்ளிரவில் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பானது. உடனடியாக பீர்க்கன்கரணை போலீஸ், தாம்பரம் தீயணைப்புத்துறை, முடிச்சூர் மின்வாரிய அலுவலகம், ஆரம்ப சுகாதார மருத்துவ குழுவினர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து உடனடியாக அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போலீஸ், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மின்கம்பியில் தொங்கிக் கொண்டு இருந்த டேனியலை மீட்டனர்.

    அதோடு மருத்துவக் குழுவினர், அதே தீயணைப்பு வாகனத்தின் மேல் பகுதியில் வைத்து, சி.பி.ஆர். சிகிச்சை கொடுத்து, டேனியல் உயிரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி டேனியல் உயிரிழந்தார்.

    இதை அடுத்து பீர்க்கன்கரணை போலீசார், டேனியல் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்துகின்றனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள், டேனியல் குதித்ததால் பழுதடைந்த மின் கம்பிகளை சீரமைத்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் பழைய பெருங்களத்தூர் பகுதிக்கு மின் இணைப்பை கொடுத்தனர்.

    மாடியிலிருந்து மின்சார கம்பிகளில் குதித்து விழுந்து, நூதனமான முறையில், வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×