என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை முயற்சி
- நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் வந்துவிடுமோ என்ற பயத்தில் மாணவி இருந்ததாக தெரிகிறது.
- மனவேதனையில் இருந்த மாணவி திடீரென வீட்டில் இருந்த வார்னிசை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
திருவள்ளூர்:
தமிழகத்தில் கடந்த 17-ந்தேதி மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது.
இதில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரிய குப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் வந்துவிடுமோ என்ற பயத்தில் மாணவி இருந்ததாக தெரிகிறது. இதில் மனவேதனையில் இருந்த மாணவி திடீரென வீட்டில் இருந்த வார்னிசை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மாணவி ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
நீட் தேர்வு முடிவு பயத்தில் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






