என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை

    • ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செல்லபெருமாள் நகர் பகுதியில் வசிப்பவர் ராஜமாணிக்கம். இவர் ஸ்ரீபெரும்புதூர் பழைய இரும்பு வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜாமணிக்கம் வீட்டை பூட்டி கொண்டு வெளியே சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×