என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாமல்பட்டி அருகே நிலத்தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது
- கடந்த 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் பள்ளிகூடத்தானை, மோகன் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே உள்ள காமாட்சிப்பட்டியை சேர்ந்தவர் பள்ளிகூடத்தான் என்கிற கிருஷ்ணன் (வயது 65). கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மோகன் (26) என்பவர் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்தது.
கடந்த 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் பள்ளிகூடத்தானை, மோகன் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயம் அடைந்த பள்ளிகூடத்தான் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






