என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிள் விற்பனையகத்தில் ரூ.84 லட்சம் மோசடி- 4 பேர் மீது வழக்கு
    X

    சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிள் விற்பனையகத்தில் ரூ.84 லட்சம் மோசடி- 4 பேர் மீது வழக்கு

    • வளன் அரசு செல்போனில் விக்னேஷ்வரனிடம் கேட்ட போது, அவர் வளன் அரசை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • வளன் அரசு சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் தனியாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் விற்பனையகம் மற்றும் சர்வீஸ் நிலையம் உள்ளது.

    இதன் உரிமையாளரான வளன்அரசு(வயது 51) கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரையிலான கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தார். அப்போது ரூ.84 லட்சம் மோசடி நடந்திருப்பதாகவும், அதனை அவர் கண்டுபிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவர் நடத்திய விசாரணையில், கடந்த 10 வருடங்களாக நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராஜபாளையத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் அங்கு பணிபுரியும் ராஜபாளையத்தை சேர்ந்த முனிராஜ், காசாளராக பணிபுரியும் சோலைச்சேரியை சேர்ந்த இனியவன் மற்றும் கழுகுமலையை சேர்ந்த ஆறுமுகம் சண்முகவேல் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வளன் அரசு செல்போனில் விக்னேஷ்வரனிடம் கேட்ட போது, அவர் வளன் அரசை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வளன் அரசு சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் 4 பேர் மீதும் கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×