என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை- சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது
    X

    வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை- சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

    • அம்பத்தூர் பகுதியில் கடந்த மாதம் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கைதானவர்களிடம் இருந்து 10 பவுன் நகை, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் கடந்த மாதம் பிருந்தா என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலமேலு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த கொள்ளை தொடர்பாக ரெட்டேரி லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ், நரேந்திரன், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், சூர்யா, புதூர் பகுதியை சேர்ந்த அஸ்வின், அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த சுகுனேஷ் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 8 பேரை கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்த 10 பவுன் நகை, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×