search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவித்த பூசாரி சேலம் சிறையில் அடைப்பு: கோவிலுக்கு வந்த மேலும் 20 பெண்களுடன் தொடர்பு
    X

    கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவித்த பூசாரி சேலம் சிறையில் அடைப்பு: கோவிலுக்கு வந்த மேலும் 20 பெண்களுடன் தொடர்பு

    • செல்வியிடம் பறித்த நகையில் தாலிக்கொடியை எனது விவசாய தோட்டத்தில் புதைத்து வைத்தேன்.
    • கொலையான செல்விக்கு 2 குழந்தைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிறந்து உடல்நலக்குறைவால் இறந்து விட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 38). இவருடைய மனைவி செல்வி (28).

    இவர் நேற்று முன்தினம் இளம்பிள்ளை அருகில் உள்ள திருமலைகிரி பாறைக்காட்டூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு சென்ற செல்வியை குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த திருமலைகிரி பெருமாம்பட்டியை சேர்ந்த கோவில் பூசாரி குமார் (42) என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

    செல்வியை கொலை செய்தது குறித்து பூசாரி குமார் போலீசாரிடம் வாக்குமுலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் எனது மனைவியை விவாகரத்து செய்து விட்டேன். எனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கட்டி அதில் பூசாரியாக இருந்தேன். கடன் பிரச்சனை மற்றும் குழந்தையின்மைக்கு தீர்வு என பல்வேறு பிரச்சனைகளுக்கு அருள்வாக்கு பெற எனது கோவிலுக்கு பலர் வந்தனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பல பெண்களுடன் சகஜமாக பேசி எனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து வந்தேன். குறிப்பாக 20 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளேன்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு வந்த செல்வியை எனது வலையில் வீழ்த்த நினைத்து நைசாக பேசி வந்தேன். பூசாரி என்பதால் என்னிடம் செல்வி சகஜமாக பேசினார். அவரிடம் உல்லாசம் அனுபவிக்க நான் நினைத்தேன். அதே நேரத்தில் அவர் தங்க நாணயம் குறைவான விலைக்கு தனக்கு கிடைப்பதாகவும் தான் வாங்கி தருவதாகவும் கூறினார். அதை நம்பி நானும் ரூ.20 ஆயிரம் கொடுத்தேன்.

    ஆனால் செல்வி தங்க நாணயம் வாங்கி தரவில்லை. இருந்தாலும் அவரை எனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவிக்க மீண்டும் திட்டம் போட்டேன். அவர் அதற்கு உடன்படாமல் மறுத்து விட்டார். இது எனக்கு மிகுந்த ஏமாற்றம் அடைந்தது. உல்லாசத்துக்கும் மறுத்து விட்டார். தங்க நாணயமும் வாங்கி தரவில்லை. எனவே எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி செல்போனில் அவரை கோவிலுக்கு வருமாறு அழைத்தேன். அவரும் காலை 11 மணியளவில் கோவிலுக்கு வந்தார். அங்கிருந்து எனது வீட்டுக்கு அவரை அழைத்து சென்றேன். அங்கு ஆசைக்கு இணங்க செய்யலாம் என திட்டமிட்டேன். அதற்கு செல்விக்கு விருப்பம் இல்லாததை உணர்ந்தேன். ஆசைக்கு இணங்க மறுத்த நிலையில் அவரிடம் கொடுத்த பணமும் வீணாக போச்சே என்று நினைத்த போது அவர் அணிந்திருந்த நகைகள் என் கண்களை உறுத்தின.

    ஏற்கனவே காட்டு பகுதியையொட்டி எனது வீட்டின் அருகே நாய் தொல்லை இருப்பதால் அவற்றுக்கு விஷம் வைக்க, வெள்ளிப்பட்டறையில் பயன்படுத்தும் சயனைடு வாங்கி வீட்டில் வைத்திருந்தது ஞாபகம் வந்தது. அந்த விஷத்தை 10 ரூபாய் குளிர்பானத்தில் கலந்து கொடுத்து செல்வியை கொலை செய்ய திட்டமிட்டேன்.

    அவரிடம் நைசாக பேசி சயனைடு கலந்த குளிர்பானத்தை கொடுத்தேன். குளிர்பானத்தை குடித்த செல்வி சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்து விட்டார். அதன்பிறகு நான் அவரது உடலை தூக்கிச்சென்று சுமாா் 200 மீட்டர் தொலைவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத புதர்பகுதியில் வீசினேன். இதற்கு முன்னதாக செல்வி கழுத்தில் இருந்த தாலி மற்றும் நகை என 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.

    பின்னர் செல்வியிடம் பறித்த நகையில் தாலிக்கொடியை எனது விவசாய தோட்டத்தில் புதைத்து வைத்தேன். மீதமுள்ள 5 பவுன் நகையை எனக்கு பழக்கமான சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த இன்னொரு செல்வியிடம் கொடுத்து அம்மாபேட்டை நகர கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் நகைக்கடனாக பெற்றேன்.

    அதில் 80 ஆயிரம் ரூபாயை எனது நண்பரிடம் வாங்கிய கடனை அடைத்து விட்டு மீதமுள்ள பணத்துடன், எனது கள்ளக்காதலியை அழைத்துக்கொண்டு ஏற்காட்டுக்கு சென்று அன்று இரவே விடுதியில் அறை எடுத்து தங்கி உல்லாசம் அனுபவித்து வந்தேன். இந்த நிலையில் செல்வியின் செல்போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் நான் போலீசிடம் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    போலீசார் பூசாரி குமாரை அழைத்துச் சென்று அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.

    கொலையான செல்விக்கு 2 குழந்தைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிறந்து உடல்நலக்குறைவால் இறந்து விட்டன. இதனால் குழந்தை வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த செல்வி அந்த கவலையை மறக்க இன்ஸ்டாகிராமில் 200-க்கும் மேற்பட்ட பதிவுகளை இட்டு பிரபலம் அடைந்தார். அவரை 1,200-க்கும் மேற்பட்டோர் பின்பற்றி வந்துள்ள நிலையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் மேலோங்கியது. இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திருமலைகிரி பெருமாம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு சென்று குழந்தை வரம் வேண்டி வழிபட்ட செல்விக்கும், பூசாரி குமாருக்கும் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆசைக்கு இணங்க மறுத்த நிலையில் குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து இன்ஸ்டாகிராம் பெண்ணை பூசாரி கொன்ற பயங்கர சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×