search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு- போராட்டம் அறிவித்த காங்கிரஸ் கவுன்சிலரிடம் விசாரணை
    X

    கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு- போராட்டம் அறிவித்த காங்கிரஸ் கவுன்சிலரிடம் விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடிக்கு இன்று வரும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாலையில் கடையம் சுற்றுவட்டார பகுதிகளான கோவிந்தப்பேரி, ராஜாங்கபுரம் கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    • இதையடுத்து அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தப்போவதாக கடையத்தை சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் மாரிக்குமார் தெரிவித்து இருந்தார்.

    கடையம்:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியை அமலாக்கத்துறை விசாரித்து வருவதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று தூத்துக்குடிக்கு வரும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாலையில் தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளான கோவிந்தப்பேரி, ராஜாங்கபுரம் கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதையடுத்து அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தப்போவதாக கடையத்தை சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் மாரிக்குமார் தெரிவித்து இருந்தார். அந்த தகவலின் அடிப்படையில் கடையம் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையிலான போலீசார் மாரிக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×