என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 தேர்வு முடிவு: தருமபுரி மாவட்டத்தில் 92.72 சதவீதம் பேர் தேர்ச்சி
- தருமபுரி மாவட்டத்தில் இருந்து தேர்வு மாணவர்களில்-8723 பேரும், மாணவிகள் 9345 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- மாவட்டம் முழுவதும் மொத்தம் 18068 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை தனியார் மற்றும் அரசு பள்ளிகள் என 176 பள்ளிகளில் 9628 மாணவர்கள், 9858 மாணவிகள் என மொத்தம் 19,486 பேர் எழுதினர். இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது.
இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 முடிவுகள் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டார்.
இதில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து தேர்வு மாணவர்களில்-8723 பேரும், மாணவிகள் 9345 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 18068 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 92.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 93.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த 0.41சதவீதம் குறைவாக பெற்று மாநிலம் முழுவதும் தேர்ச்சி பெற்றத்தில் 23-வது தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் தேர்ச்சி பெற்று விதத்தில் 17-வது இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.