என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஈத்தாமொழி அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    ஈத்தாமொழி அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    ஈத்தாமொழி அருகே உள்ள மங்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்.

    இவர் புதூர் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ராஷிகா (வயது 16). இவர் ஈத்தாமொழியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    தற்பொழுது ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று வந்த நிலையில் ராஷிகா உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள அறைக்கு சென்ற ராஷிகா நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது தாயார் மற்றும் சகோதரி கதவை திறந்து பார்த்தபோது ராஷிகா தூக்கில் தொங்குவது தெரியவந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் ராஷிகாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராஷிகா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இதையடுத்து ராஷிகா உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஷிகாவின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.

    பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×