search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு- பொதுமக்கள் சாலை மறியல்
    X

    சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு- பொதுமக்கள் சாலை மறியல்

    • நாம் தமிழர் கட்சி மாநில தொழிற்கூட நிர்வாகிகள் அன்புதென்னரசு உள்பட பலர் ராஜாஜிபுரம் பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றனர்.
    • பொதுமக்கள், உங்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் எங்களைப் பற்றி சர்ச்சையாக பேசி உள்ளார். எனவே நீங்கள் வாக்கு சேகரிக்க வர வேண்டாம் என்று கூறி உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். கடந்த 13-ந்தேதி திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி பேசியதாக சர்ச்சை எழுந்தது.

    இதனையடுத்து நேற்று மாலை நாம் தமிழர் கட்சி மாநில தொழிற்கூட நிர்வாகிகள் அன்புதென்னரசு உள்பட பலர் ராஜாஜிபுரம் பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உங்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் எங்களைப் பற்றி சர்ச்சையாக பேசி உள்ளார். எனவே நீங்கள் வாக்கு சேகரிக்க வர வேண்டாம் என்று கூறி உள்ளனர்.

    இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அன்புதென்னரசு என்பவரது மண்டை உடைந்தது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருநகர் காலனி பஸ் நிறுத்தம் பகுதியில் சீமானை கைது செய்யக்கோரி இன்று சாலை மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×