என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாராளுமன்றத்தில் நெடுஞ்சாலை சீரமைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்த விஜய் வசந்த்
- மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலத்தில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து மக்கள் பயணம் செய்ய சிரமப்படுகின்றனர்.
- மத்திய அரசு இந்த சாலையை செப்பனிட போதிய நிதி ஒதுக்கி விரைவில் செப்பனிட வேண்டும் என கேட்டு கொண்டார்.
கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்து இருப்பதால் அவற்றை விரைவில் செப்பனிட நிதி ஒதுக்க வேண்டும் எனவும், நான்கு வழி சாலை பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் எனவும் இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்து அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
கடும் மழை காரணமாக தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. மேலும் இந்த சாலை வழியாக அதிக பாரம் ஏற்றி கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதால் சாலையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அன்றாடம் இந்த சாலையை ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். கேரளா மாநிலத்திற்கு செல்ல இந்த சாலை மிகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சாலை இப்பொழுது குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
குறிப்பாக மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலத்தில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து மக்கள் பயணம் செய்ய சிரமப்படுகின்றனர். இந்த சாலை மிகவும் ஆபத்தானதாக மாறி பல உயிர்களை இழந்துள்ளோம். ஆகவே மத்திய அரசு இந்த சாலையை செப்பனிட போதிய நிதி ஒதுக்கி விரைவில் செப்பனிட வேண்டும் என கேட்டு கொண்டார்.
அது போல் இந்த சாலைக்கு மாற்றாக பணி நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பல்வேறு காரணங்களால் பணிகள் மெதுவாக நகர்கிறது. இதனை வேகப்படுத்த வேண்டும். மேலும் நான்கு வழி சாலை பணிகளுக்கு நிலத்தை அளித்த நில உரிமையாளர்களுக்கு 12 கிராமங்களில் போதிய நிதி வழங்காத காரணத்தால் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஆகவே இந்த பிரச்சனைக்கும் மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.






