search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கேயம் அருகே ஆயில் மில்லில் தீ விபத்து- ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
    X

    காங்கேயம் அருகே ஆயில் மில்லில் தீ விபத்து- ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

    • தீ மளமளவென மில்லில் இருந்த தேங்காய் பருப்பு மற்றும் எந்திரங்கள் போன்றவற்றில் பரவி எரிய தொடங்கியுள்ளது.
    • தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேலான எந்திரங்கள் மற்றும் தேங்காய் பருப்புகள் எரிந்து நாசமாகின.

    திருப்பூர்:

    காங்கேயம் அருகே தம்மரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 45). இவர் அந்த பகுதியில் ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஆயில் மில்லில் தீப்பிடித்து எரிய தொடங்கி உள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தீ மளமளவென மில்லில் இருந்த தேங்காய் பருப்பு மற்றும் எந்திரங்கள் போன்றவற்றில் பரவி எரிய தொடங்கியுள்ளது. இது குறித்து காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் காங்கேயம் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) ராஜு தலைமையிலான வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தீயை அணைக்க முடியவில்லை. இதன் பின்னர் ஊத்துக்குளியில் இருந்து மேலும் ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டு, நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேலான எந்திரங்கள் மற்றும் தேங்காய் பருப்புகள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் தீ விபத்திற்கு மின்சார கசிவு காரணம் என தெரிவித்தனர்.

    Next Story
    ×