என் மலர்
உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார் விஜய் வசந்த் எம்.பி.
- கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈத்தவிளையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
- கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈத்தவிளையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினேன்.
இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மறைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஜெபின் சார்லஸ் அவர்கள் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
Next Story






