என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் வாலிபரின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு-  போலீசார் விசாரணை
    X

    தூத்துக்குடியில் வாலிபரின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு- போலீசார் விசாரணை

    • மோட்டார் சைக்கிள் எரிந்த போது அருகில் இருந்த வாஷிங் மெஷின், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து விட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவைத்து எரித்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே எம். சவேரியார்புரத்தை சேர்ந்தவர் ராஜபிரதீப் (வயது21). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.

    இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளை, முன் விரோதம் காரணமாக மர்மநபர்கள் தீ வைத்து எரித்து விட்டதாக முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். மேலும் மோட்டார் சைக்கிள் எரிந்த போது அருகில் இருந்த வாஷிங் மெஷின், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து விட்டதாக புகாரில் அவர் கூறி உள்ளார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவைத்து எரித்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×