என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்றத்தூரில் லாரி மோதி காவலாளி பலி
    X

    குன்றத்தூரில் லாரி மோதி காவலாளி பலி

    • ரத்தினவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
    • விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர்.

    குன்றத்தூர்:

    குன்றத்தூர் குளக்கரை தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 57), காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். குன்றத்தூர் தேரடி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    ரத்தினவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரத்தினவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×