என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
    X

    கடத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

    • கோவிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.
    • அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜகோபால் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே புட்டிரெட்டிப்பட்டியில் பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநியைத்துறை கட்டுபாட்டில் இருந்து வருகிறது.

    இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூசாரி பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் பூசாரி கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் பணம் ரூ.20 ஆயிரம் வரை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜகோபால் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இரவு நேரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாதபோது கோவிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றதும், உண்டியலில் இருந்து மர்ம நபர் ரூ.20 ஆயிரம் வரை திருடி சென்றிருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×