என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் 72 இடங்களில் கொப்பறை தேங்காய் கொள்முதலுக்கு அரசு அனுமதி- அரசாணை வெளியீடு
- கொள்முதல் செய்யப்பட்ட தேங்காயினை மத்திய அல்லது மாநில நிறுவனத்திடம் உள்ள கிடங்குகளில் இருப்பு வைக்க வேண்டும்.
- கொள்முதல் செய்வதற்கு மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தோடு ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் 72 நிலையங்களில் கொப்பறை தேங்காய் கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் ரூ. 640 கோடி மதிப்பிலான 56 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பறைத் தேங்காயினை மத்திய அரசு அறிவித்த, குறைந்தபட்ச ஆதரவு விலையில், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்துடன் இணைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அவற்றை செயல்படுத்தும் வகையில் 72 முதன்மை கொள்முதல் நிலையங்களில், தேசிய வேளாண் கூட்டுறவு இணையத்தால் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இப்போது அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
கொள்முதல் முடிந்தவுடன் விலை ஆதரவு திட்டத்திற்காக மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளரிடம் உள்ள மூலதன நிதியிலிருந்து விவசாயிகளுக்கு மின்னணு பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட தேங்காயினை மத்திய அல்லது மாநில நிறுவனத்திடம் உள்ள கிடங்குகளில் இருப்பு வைக்க வேண்டும், கொள்முதல் செய்வதற்கு மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தோடு ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த மாதாந்திர அறிக்கையை தமிழக அரசிற்கு அனுப்ப வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.