search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை- பெண்கள் அதிர்ச்சி
    X

    ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை- பெண்கள் அதிர்ச்சி

    • தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது.
    • பெண்கள் தங்கம் வாங்குவதற்கான உற்சாகத்தில் இருந்தனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை பட்டாசு, இனிப்புகளுடன் தங்க நகை வாங்கியும் கொண்டாடுவது வழக்கம்.

    தீபாவளிக்கு தங்கம் வாங்கி பூஜை செய்து கேதாரி நோன்பு இருந்தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

    எனவே பொதுமக்கள் பலரும் தீபாவளிக்காக தங்கம் வாங்க முடிவு செய்திருந்தனர். தற்போது பலர் தங்கம் வாங்க தொடங்கி விட்டனர்.

    அதற்கு ஏற்ற வகையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இதனால் பெண்கள் தங்கம் வாங்குவதற்கான உற்சாகத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்கை கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்கம் விலை இன்று திடீரென்று பவுனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் வாங்க நினைத்திருந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த 13-ந்தேதி பவுன் தங்கம் ரூ.38,080-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.37,880 ஆக குறைந்தது. 15-ந்தேதி ரூ.37,520 ஆனது.

    நேற்று முன்தினம் தங்கம் விலை ரூ.37,480 ஆக குறைந்தது. நேற்று மீண்டும் குறைந்து ரூ.37,320-க்கு விற்கப்பட்டது.

    ஒரு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 உயர்ந்திருப்பதால் தங்கம் வாங்க நினைத்திருந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,920-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,665-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.4,740-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.61.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.70 அதிகரித்து ரூ.63.20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.63,200-க்கு விற்கப்படுகிறது.

    Next Story
    ×