என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை எடப்பாடி பழனிசாமி வருகை
- தஞ்சை அருகே செங்கிப்பட்டி மற்றும் வல்லம் சாலையில் காலை 9 மணியவில் அ.தி.மு.க. கொடியை ஏற்றுகிறார்.
- பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அ.தி.மு.க. சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
அதன்படி திருச்சியில் இருந்து காரில் வரும் அவர் தஞ்சை அருகே செங்கிப்பட்டி மற்றும் வல்லம் சாலையில் காலை 9 மணியவில் அ.தி.மு.க. கொடியை ஏற்றுகிறார்.
பின்னர் அவர் பட்டுக்கோட்டையில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
இதையடுத்து திருநல்லூரியில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமுத்துவின் தாயார் படத்திறப்பு , கல்யாண ஓடையில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் துரைசெந்தில் சகோதரர் ஆதிமுத்து வள்ளாலதேவர் படத் திறப்பு, திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் இல்ல திருமணம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அ.தி.மு.க. சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.






