என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை- காப்பாளர், சக மாணவர்களிடம் விசாரணை

- உணவு சாப்பிட்ட பிறகு அறைக்குச் சென்ற மாணவன் காலை வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
- கதவும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்த போது மாணவன் மெடாரமெட்லா சரண் தூக்கில் பிணமாக தொங்கினார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த அரண்வாயில் குப்பம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே உள்ள காவலி பகுதியைச் சேர்ந்த மெடாரமெட்லா சரண் இ.சி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி இருந்தார்.
நேற்று வழக்கம் போல் உணவு சாப்பிட்ட பிறகு அறைக்குச் சென்ற மாணவன் காலை வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. கதவும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்த போது மாணவன் மெடாரமெட்லா சரண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் மற்றும் செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுதி காப்பாளர் மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.