என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த கொள்ளையனை பிடித்த கல்லூரி மாணவிகள்
- மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து நகை மற்றும் 8000 பணத்தை கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்தனர்.
- தப்பி ஓடிய கூட்டாளியின் பெயர் ஆனந்த் என்கிற ஆடு ஆனந்த் என்பதும் தெரிய வந்தது.
குரோம்பேட்டை சாஸ்திரி காலனி 1-வது தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் கார் விற்பனை நிலையத்தில் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக பணி புரிந்து வருகிறார். 2 மகள்கள் மற்றும் தனது தாய் சகுந்தலாவுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
நேற்று சகுந்தலா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மாலையில் சகுந்தலா வீட்டை பூட்டிவிட்டு கல்லூரியில் இருந்து வரும் தனது பேத்திகள் அழைத்து வருவதற்காக வெளியே சென்றார்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து 11 சவரன் தங்க நகை மற்றும் 8000 பணத்தை கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்தனர்.
கல்லூரி முடிந்து தனது பேத்திகளுடன் வீட்டிற்கு வந்த சகுந்தலா மாடிப்படியில் இருந்து இறங்கி வந்தவர்களை விசாரித்த போது அதில் இருந்து ஒருவர் தப்பி ஓடியுள்ளார். இதை பார்த்த சகுந்தலா மற்றும் கல்லூரி மாணவிகளான பேத்திகள் இருவரும் சேர்ந்து கொள்ளையனை மடக்கி பிடித்துக்கொண்டு கூச்சலிட்டனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வந்து பிடித்து தர்ம அடி கொடுத்து குரோம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிப்பட்டவனின் பெயர் ஆலந்தூர் பகுதியை சேர்ந்த தணமூர்த்தி (வயது 23) என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய கூட்டாளியின் பெயர் ஆனந்த் என்கிற ஆடு ஆனந்த் என்பதும் தெரிய வந்தது.
தப்பி ஓடிய கொள்ளையனிடம் திருடிய நகை மற்றும் பணம் உள்ளதும் தெரிய வந்தது இதன் அடிப்படையில் குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.






