என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் சேதமடைந்த கார்.
பாவூர்சத்திரத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகனின் பின்னால் சென்ற கார்கள் அடுத்தடுத்து மோதியதால் பரபரப்பு
- பாவூர்சத்திரம் அருகே இணை மந்திரி கார் சென்ற போது கட்சித்தொண்டர்களை கண்டதும் மெதுவாக சென்றது.
- பின்னால் சென்ற கட்சி நிர்வாகிகள் காரும், பாதுகாப்புக்காக சென்ற போலீசாரின் காரும் ஒன்றன்பின் ஒன்றாக மோதியது.
தென்காசி:
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 307-வது பிறந்தநாளையொட்டி தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவல் உள்ள நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதற்காக மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் ஆலங்குளம் வழியாக சென்றார்.
பாவூர்சத்திரம் அருகே இணை மந்திரி கார் சென்ற போது கட்சித்தொண்டர்களை கண்டதும் மெதுவாக சென்றது.
அப்போது பின்னால் சென்ற கட்சி நிர்வாகிகள் காரும், பாதுகாப்புக்காக சென்ற போலீசாரின் காரும் ஒன்றன்பின் ஒன்றாக மோதியது.
இதில் கட்சி நிர்வாகி ஒருவரின் கார் பலத்த சேதம் அடைந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






