என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்
    X

    அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    • எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு.
    • எடப்பாடி பழனிசாமிக்கு 5.5 அடி உயர வெள்ளிவேலை அ.தி.மு.க. தொண்டர்கள் வழங்கினர்.

    மதுரை:

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு, வலையங்குளத்தில் இன்று நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு என்பதால், 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திடல் அமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நேற்று முதலே மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதையடுத்து, மாநாடு புறப்படுவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு 5.5 அடி உயர வெள்ளிவேலை சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் மற்றும் தொண்டர்கள் வழங்கினர். அ.தி.மு.க. மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாநாட்டு திடலுக்கு நூற்றுக்கணக்கான வாகன அணிவகுப்புடன் புறப்பட்டார்.

    திடலை வந்தடைந்த எடப்பாடி பழனிசாமி மாநாட்டின் முதல் நிகழ்வாக 51 அடி உயரம் கொண்ட கம்பத்தில், அ.தி.மு.க. கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து 10 நிமிடம் பூக்கள் தூவப்பட்டது.

    Live Updates

    • 20 Aug 2023 7:25 PM IST

      நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது. நீட் தேர்வுக்காக திமுகவின் உண்ணாவிரத போராட்டம் நாடகம். திமுக மத்தியில் கூட்டணியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் இருக்காது என கூறினார்கள்- ஈ.பி.எஸ்.

    • 20 Aug 2023 7:21 PM IST

      மீனவர்களுக்கு பாதுகாப்பான அரசு அதிமுகதான். கச்சத்தீவு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம். கச்சத்தீவை மீட்க திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்களின் வாக்குகளை பெறவே கச்சத்தீவை மீட்போம் என பொய்யான வாக்குறுதியை அளித்தது. சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்குமான கட்சி அதிமுக- ஈ.பி.எஸ்.

    • 20 Aug 2023 7:16 PM IST

      மதுரையில் எதை துவங்கினாலும் வெற்றி, வெற்றி, வெற்றிதான். எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அதிமுகவை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் கிடையாது. தொண்டனாக இருந்து உழைப்பாள் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்- ஈபிஎஸ்.

    • 20 Aug 2023 7:14 PM IST

      முதலீட்டாளர்கள் மாநாடு மூலம், பலருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. அதிமுக ஆட்சியின்போது மருத்துவ துறையில் சாதனை படைத்தோம். அதிமுக ஆட்சியின் அனைத்து துறைகளிலும் விருதுகளை பெற்றோம்- எடப்பாடி பழனிசாமி.

    • 20 Aug 2023 7:02 PM IST

      பல ஆண்டுகளாக ஏரி, குளங்கள் தூர்வாரப்படால் இருந்தது. மழை நீரை சேமிக்க குடிமராமத்து திட்டம் கொண்டு வந்த அரசு, அதிமுக அரசு. டெல்டா மாவட்டங்களை காத்தது அதிமுக அரசாங்கம்தான்.

    • 20 Aug 2023 6:59 PM IST

      டெல்டா விவசாயிகள் தங்கள் நிலத்தை பாதுகாக்குமாறு கோரிக்கைகள் வைத்தனர். நான் ஒரு விவசாயி, விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்களை புரிந்தவன் நான். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம்- எடப்பாடி பழனிசாமி.

    • 20 Aug 2023 6:57 PM IST

      காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வாதாடி தீர்ப்பு பெற்றது அதிமுக அரசு.

    • 20 Aug 2023 6:56 PM IST

      10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 50 ஆண்டு முன்னேற்றத்தை பார்த்தோம். நான் முதல்வரான போது 10 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி தாக்குபிடிக்குமா ? என்றார்கள். நான் 4 ஆண்டுகள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தேன்- எடப்பாடி பழனிசாமி.

    • 20 Aug 2023 6:48 PM IST

      ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் நினைவிடம் கட்டப்பட்டது. 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 50 ஆண்டு முன்னேற்றத்தை பார்த்தோம்- எடப்பாடி பழனிசாமி.

    • 20 Aug 2023 6:46 PM IST

      எம்.ஜி.ஆர் நூற்றாண்ட விழாவை சிறப்பாக நடத்தி காட்டினோம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டினோம்- எடப்பாடி பழனிசாமி.

    Next Story
    ×