என் மலர்
உள்ளூர் செய்திகள்

அச்சரப்பாக்கத்தில் வீடு புகுந்து அடகு கடை உரிமையாளர் வீட்டில் வைர நகை-பணம் கொள்ளை
- வீட்டில் ஆட்கள் இருந்த போதே குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம், மேற்கு மாட வீதியில் வசிப்பவர் பாலாஜி. இவர்அச்சரபாக்கத்தில் பஜார் வீதியில் காப்பி தூள் கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேகா.இவர்களது மகன் அரவிந்த்.
நேற்று இரவு பாலாஜி வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு தூங்கினர். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து புகுந்தனர்.
பாலாஜி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தூங்கியதால் கொள்ளையர்கள் வந்தது தெரியவில்லை. இதனை சாதகமாக பயன் படுத்திய கொள்ளைகும்பல் வீட்டில் உள்ள பீரோவை உடைத்தனர். மேலும் உணவு பொருள் டப்பாக்களில் மறைத்து வைத்திருந்த வைரநகை உள்ளிட்ட 28 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். அதிகாலை பாலாஜி எழுந்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதையும் நகை-பணம் கொள்ளை போய் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பாலாஜி அச்சரப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மோப்பநாயுடன் வந்து விசாரணை நடத்தினர்.கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
வீட்டில் ஆட்கள் இருந்த போதே குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






