search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அருகே விவசாயி கொலை- 2 பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை
    X

    சேலம் அருகே விவசாயி கொலை- 2 பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை

    • கோபாலின் மகன் கோகுல்ராஜ் மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ராமாபுரம் காட்டு பிள்ளையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபால். விவசாயி. இவரது அண்ணன் விஜயன்.

    இவர்களுக்கு பூர்வீக சொத்தாக 4 1/2 ஏக்கர் நிலம், 9 தறி பட்டறைகள் உள்ளது.

    விஜயன் இறந்த நிலையில் பூர்வீக சொத்தை பாக பிரிவினை செய்து கொள்வதில் கோபால், விஜயன் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 30-6-2017 அன்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கோபாலை, விஜயனின் மகன் குணசேகரன் மற்றும் உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன், ராஜி, பாரதி, சாந்தாமணி, குருசாமி ஆகியோர் இரும்பு ராடால் தாக்கினர்.

    இதில் பலத்த காயமடைந்த கோபால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து கோபாலின் மகன் கோகுல்ராஜ் மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குணசேகரன், அவரது உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன், ராஜி, பாரதி, சாந்தாமணி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.7000 அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். இதில் 6-வது குற்றவாளியான குருசாமி ஏற்கனவே இறந்து விட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

    Next Story
    ×