என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே நிலத்தகராறில் உடற்பயிற்சியாளருக்கு அரிவாள் வெட்டு- 5 பேர் கைது
    X

    திருவள்ளூர் அருகே நிலத்தகராறில் உடற்பயிற்சியாளருக்கு அரிவாள் வெட்டு- 5 பேர் கைது

    • மர்ம கும்பல் மணியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.
    • மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அடுத்த சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி(23). உடற்பயிற்சி கூட பயிற்சியாளராக உள்ளார். இவர் மப்பேடு பகுதியில் சொந்தமாக உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவர், கடந்த 21-ந் தேதி இரவு மப்பேடு உடற்பயிற்சி கூடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது மர்ம கும்பல் மணியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்தஅவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த தாக்குதல் நிலத்தகராறில் நடந்து இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் மணியை வெட்டிய வழக்கில் பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு, ஆகாஷ், பாலச்சந்தர், அரக்கோணத்தைச் சேர்ந்த கோகுல், கண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×