search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடம்பாக்கத்தில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடிய 2 வாலிபர்கள் கைது
    X

    கோடம்பாக்கத்தில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடிய 2 வாலிபர்கள் கைது

    • கோடம்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் வரை பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரித்தனர்.
    • செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட இருவரும் சேர்ந்து அதிவேகமாக செல்லும் மோட்டார் சைக்கிளை குறி வைத்து திருடுவது வாடிக்கை.

    போரூர்:

    சென்னை கோடம்பாக்கம் சி.ஆர்.பி கார்டன் தெருவை சேர்ந்தவர் தனசேகர். போலீஸ்காரரான இவர் புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார்.

    இவர் வழக்கம் போல இரவு வீட்டின் முன்பு ரூ.3 லட்சம் மதிப்புள்ள தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தி.நகர் உதவி கமிஷனர் பாரதிராஜா சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில் வாலிபர்கள் 2பேர் தனசேகரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிந்தது.

    ஆனால் அவர்களது முகம் சரியாக தெரியவில்லை. இதையடுத்து கோடம்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் வரை பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர்.

    இதில் மோட்டார் சைக்கிளை திருடியது பல்லாவரம் பகுதியை சேர்ந்த சூர்யா, பாலாஜி என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள 5 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட இருவரும் சேர்ந்து அதிவேகமாக செல்லும் மோட்டார் சைக்கிளை குறி வைத்து திருடுவது வாடிக்கை.

    மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பின்னர் போலீசில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அவ்வப்போது இடை தரகர்கள் மூலமாக திருட்டு மோட்டார் சைக்கிளை விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்களது கூட்டாளியாக செயல்பட்டு வந்த சரவணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பஸ் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×