என் மலர்
உள்ளூர் செய்திகள்

செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
- மாணவி வர்ஷா கடந்த 2 நாட்களாக வீட்டில் யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
- நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்த மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் கோபி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அமுதா (43). திருப்பூர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ரமேஷ். நம்பியூர் பகுதியில் உள்ள தனியார் ஹார்டுவேர் கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ரூபினி பிரியா, வர்ஷா (15) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ரூபினி பிரியா 12-ம் வகுப்பும், 2-வது மகள் வர்ஷா ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
மாணவி வர்ஷாவுக்கு கடந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்தனர். அந்த செல்போனில் மாணவி வர்ஷா எந்த நேரமும் விளையாடிக் கொண்டிருந்து உள்ளார். தற்போது பொதுத்தேர்வு வருகிறது எனவே செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று அவரது தாய் கண்டித்து உள்ளார். மேலும் இது குறித்து அவர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் செல்போன் தலைமை ஆசிரியரிடம் கொடுக்கப்பட்டது.
இதனால் மாணவி வர்ஷா கடந்த 2 நாட்களாக வீட்டில் யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டில் விட்டத்தில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுப்பற்றி தெரியவந்ததும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகறி அழுதனர். மேலும் இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்த மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.






