என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் ரோட்டரி மிட்டவுன் தலைவர் சீனிவாசன் பயணிகளுக்கு இனிப்பு வழங்கிய காட்சி.
ரெயிலில் பயணிகளுக்கு இனிப்பு ரோட்டரி மிட்டவுன் சங்கத்தினர் வழங்கினார்
- பயணிகள் ரெயில் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
- ரெயிலில் வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
சேலம்:
விருத்தாசலம்-சேலம் இடையே பயணிகள் ரெயில் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், ரெயில் பயணிகள், சேவை சங்கங்களின் கோரிக்கையினை ஏற்று இனி ஞாயிற்றுக்கிழமையிலும் இயக்க ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று சேலம்-விருத்தாசலம் இடையே இந்த ரெயில் இயக்கப்பட்டது. ஆத்தூர் ரெயில்நிலையத்துக்கு இந்த ரெயில் இன்று காலை 7.05 மணிக்கு வந்தது. இதை தொடர்ந்து ரெயிலுக்கு ரோட்டரி மிட்டவுன் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரெயிலில் வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆத்தூர் ரோட்டரி மிட்டவுன் சங்க தலைவர் சீனிவாசன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.






