என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது
திருநல்லூர் கோவிலில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம்
- முதல் நிகழ்வாக சோமசுந்தரர் புறப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
- திரளான பெண்கள் கலந்து கொண்டு சீர்வரிசை எடுத்து வந்தனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே உள்ள திருநல்லூர் அருள்மிகு கிரிசுந்தரி உடனாய கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா நிகழ்ச்சி கடந்த 2-ந்தேதி தொடங்கப்பட்டு, முதல் நிகழ்வாக சோம சுந்தரர் சுவாமி புறப்பாடு நடைபெற்று
தீர்த்தவாரி நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு திரளான பெண்கள் கலந்து கொண்டு சீர்வரிசை எடுத்து வந்தனர்.
அதன் பின்பு மந்திரங்கள் முழங்க மேளதாளங்கள் வாசிக்க பக்தர்கள் முன்னிலையில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள், திருக்கோவில் பணியாள ர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






