search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் தானியங்கி ஒலிபெருக்கி திடீர் பழுது- விபத்து அபாயம்
    X

    மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் தானியங்கி ஒலிபெருக்கி திடீர் பழுது- விபத்து அபாயம்

    • மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் முதல் கொண்டை ஊசி வளைவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
    • அதிவேகமாக வரும் வாகனங்களால் வன உயிரினங்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வு ஏற்படுகிறது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரு வனச்சாலைகள் உள்ளன. ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இந்த சாலையில் எப்போதும் வாகனங்கள் அனிவகுத்து சென்று வருகின்றன.

    குறிப்பாக மேட்டுப் பாளையம்-குன்னூர் சாலையை அதிகளவில் வாகன பயன்பாடு உள்ளது. அதே சமயத்தில் இந்த சாலை அடர் வனத்தில் இருப்பதால் யானை, மான், குரங்கு, சிறுத்தை உள்ளிட்ட வன உயிரினங்கள் அவ்வப்போது சாலையை கடக்கும் நிலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் வன உயிரினங்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வு ஏற்படுகிறது.

    அத்துடன் இந்த சாலையில் ஏழு கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் இந்த வளைவுகளில் அடிக்கடி வாகனங்களும் ஒன்றொடு ஒன்று மோதி விபத்து ஏற்படுவதுடன் பள்ளத் தாக்கில் கவிழும் நிலையும் இருந்து வருகிறது. எனவே கொண்டை ஊசி வளைவில் வரும் வாகனங்கள் அந்த வளைவுக்கு முன்னரே வாகனங்கள் வருவதை அறிந்து கொள்ளவும், வன உயிரினங்கள் அந்த வழியாக வருவதை தவிர்க்கவும் சாலை ஓரத்தில் தானியங்கி ஒலிபெருக்கி கருவி தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்டது.

    இதன் மூலம் வாகன விபத்துகள் தவிர்க்கப்படும் என கூறி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் முதல் கொண்டை ஊசி வளைவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கி ஓரா ண்டு கூட முழுமை பெறாத நிலையில் தற்போது அந்த தானியங்கி ஒலிபெருக்கி முற்றிலும் பழுது பட்டு எந்த பயனும் இன்றி முடங்கியுள்ளது.

    கொண்டை ஊசி வளைவு முன்பே சோலார் மூலம் இயங்கும் சென்சார் பொருத்தபட்டு அந்த வழியாக ஒரு வாகனம் கொண்டை ஊசி வளைவி னை கடக்கும் போது சென்சார் மூலம் தானாகவே ஒலி பெருக்கி இயங்கி வாகனம் வருவதை அறிவிக்கும் அதுமட்டுமின்றி அங்குள்ள சிக்னல்கள் மற்றும் அறிவுப்பு பலகை ஆகியவை ஒரே சமயத்தில் இயங்கும். இது மேலே இருந்து வரும் வாகனங்கள் மற்றும் கீழே இறங்கும் வாகனங்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்படுத் தப்பட்டிருந்தது. ஆனால் அதனை முறையாக நெடுஞ்சாலைத்துறை பராமரிக்க தவறியதால் அது இப்போது பயன்பட்டில் இல்லாமல் முடங்கியுள்ளது.

    தற்போது சாலை வாகனங்களை வந்தால் சிக்னல் கொடுக்கும் சென்சார்கள் மற்றும் டிஜிட்டல் அறிவிப்பு பலகை, ஒலிப்பெருக்கி என எதுவும் செய ல்பாட்டில் இல்லாததால் இந்த திட்டம் பயன்பாடு இன்றி உள்ளது. இனிவரும் காலம் கோடை சீசன் என்ப தால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என ஆயிரக்க ணக்கானோர் ஊட்டிக்கு வருவார்கள். எனவே விபத்துகளை தடுக்க அதற்குள் இந்த தானியங்கி ஒலிபெருக்கி அலாரம் திட்டத்தை பய ண்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×