என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை வீட்டில் திடீர் தீ விபத்து
- வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.
- விபத்தில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது பக்கத்து வீட்டில் துக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக சுரேஷ் வீட்டில் வைத்து சமையல் செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை திடீரென வீட்டில் இருந்த சிலிண்டர் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. நிலைய அதிகாரி சிவசங்கரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் ராஜா (35), கவுசியா (13), மாரித்துரைச்சி (29) ஆகிய 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் களை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story