search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் சுற்றுலா சென்ற மாணவ-மாணவிகள்-கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    மாணவ-மாணவிகள் சுற்றுலாவை கலெக்டர் ஷஜீவனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தேனி மாவட்டத்தில் சுற்றுலா சென்ற மாணவ-மாணவிகள்-கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா செல்லும் மாணவர்களை கலெக்டர் ஷஜீவனா வழியனுப்பி வைத்தார்.
    • ஆண்டிபட்டி அருங்காட்சியகம், வைகை அணை மற்றும் வைகை அணை பூங்காவை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில், உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா செல்லும் மாணவர்களை கலெக்டர் ஷஜீவனா வழியனுப்பி வைத்தார்.

    கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ- மாணவிகள் மத்தியில் சுற்றுலா குறித்து கலாச்சார அரசியல் மற்றும் பொருளா தார தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படு த்தும் வகையில் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி,

    ஆண்டிபட்டி, பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடு திகளில் தங்கி பயிலும் 90 பள்ளி மாணவ, மாணவிகள், பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 90 பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் என மொத்தம் 200 பேர் 3 பஸ்களில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா செல்வதற்கான பயணத்தை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    ஆண்டிபட்டி அருங்கா ட்சியகம், வைகை அணை மற்றும் வைகை அணை பூங்காவை பார்வையிட்டு புதிய பஸ் நிலையத்தில் நிறைவடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

    Next Story
    ×