என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் சிவசங்கரை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் சந்தித்து மனு அளித்தபோது எடுத்த படம்.
செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்- அமைச்சரிடம், சிவபத்மநாதன் மனு
- செங்கோட்டையில் இருந்து கடையநல்லூர் செல்லும் பஸ் கடந்த 2 ஆண்டு காலமாக முறையாக வரவில்லை.
- மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சிவசங்கர் உடனடி நட வடிக்கை எடுப்பதாக கூறினார்.
தென்காசி:
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
அதில் செங்கோட்டையில் இருந்து கடையநல்லூர் செல்லும் பஸ் கடந்த 2 ஆண்டு காலமாக முறையாக வரவில்லை. அந்த பஸ்ஸை முறையாக செங்கோட்டை, விஸ்வநாத புரம், தேன்பொத்தை, பண்பொழி, கரிசல்குடியிருப்பு, வடகரை, வாவா நகரம், அச்சன்புதூர், காசி தர்மம், மேலகடையநல்லூர் வழியாக மீண்டும் இயக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சிவசங்கர் உடனடி நட வடிக்கை எடுப்பதாக கூறினார். சந்திப்பின் போது தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, செங்கோட்டை நகர செயலாளர் வெங்கடேஷ், தலைமை பொது குழு உறுப்பினர் சாமிதுரை, அருள், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சக்தி, கடையநல்லூர் முன்னாள் ஒன்றிய செய லாளர் காசி தர்மம் துரை, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மூவண்ணா மசூது, மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் சேக் முகமது, கடையநல்லூர் நகராட்சி உறுப்பினர் மைதீன் கனி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், கடையம் பெரும்பத்து ஊராட்சி தலைவர் பரமசிவம், நாகல்குளம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஆம்பூர் கருணாநிதி, வக்கீல் ஹரி, ஒன்றிய கவுன்சிலர் சங்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.






