என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூரில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். அருகில் துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் காந்திராஜ் உள்ளனர்.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: மேயர் சுந்தரி ராஜா உறுதி
- மக்களை தேடி மேயர் என்பதன் மூலம் மக்களி டம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்று வருகின்றனர்.
- கடலூர் துறைமுகம் 34 முதல் 38 வது வார்டு வரையில் நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட 45 வார்டுகளில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் காந்திராஜ் மற்றும் அதிகாரிகள் மக்களை தேடி மேயர் என்பதன் மூலம் மக்களி டம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மக்களை தேடி மேயர் திட்டத்தின் கீழ் கோரிக்கை மனு வாங்கும் முகாம் கடலூர் துறைமுகம் 34 முதல் 38 வது வார்டு வரையில் நடைபெற்றது.
இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி களை உடனுக்குடன் விரைந்து செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் சுந்தரிராஜா உறுதி யளித்தார். அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மண்டல குழு தலைவர் இளையராஜா, கவுன்சிலர் கவிதா ரகு ராமன், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






