search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில்  15 நீர் பிடிப்பு குளங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
    X

    உடன்குடி அருகே தண்ணீர் இல்லாத தாங்கை குளம்.


    உடன்குடியில் 15 நீர் பிடிப்பு குளங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

    • தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
    • உடன்குடி பகுதியில் பாசன குளங்கள் ஒரு சில மட்டுமே உள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகள், முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் உடன்குடி வட்டார பகுதியை மழை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

    உடன்குடியை சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு குளங்களான செம்மறிபடுகைகுளம், சடையனேரிகுளம், தாங்கைக்குளம், அய்யனார்குளம், நரிக்குளம், தண்டுபத்துவடக்குகுளம், மானாட்சிகுளம், குண்டாங்கரைகுளம், சிறுகுளம், இடையர்குளம், தேரிகுண்டாங்கரை உட்பட 15 நீர் பிடிப்பு குளங்கள் தண்ணீர் இல்லாமல் முழுமையாக வறண்டு கிடக்கிறது.

    மழை வந்து கடலுக்கு வீணாக செல்லும்போது மட்டும்தான் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காத்திருக்காமல் ஏதாவது ஒரு வழியில் இந்த 15 நீர் பிடிப்பு குளங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடி பகுதியில் பாசன குளங்கள் ஒரு சில மட்டுமே உள்ளது.

    அனைத்துமே நீர்ப்பிடிப்பு குளங்கள் தான். பம்புசெட் மூலமேவிவசாயம் நடைபெறுவதால் அவை உறிஞ்சும் தண்ணீரை மேற்கண்ட குளங்கள் மூலமாக வருடந்தோறும் முழுமையாக நிரப்பி கொடுத்தாலே விவசாயம் விறுவிறுப்பாக நடைபெறும்.

    இதனால் மழையை மட்டுமே எதிர்பார்த்திருக்க அவசியம் இல்லை. 15 நீர் பிடிப்பு குளங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.







    Next Story
    ×