search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி, மகன்  சிகிச்சைக்காக திருடினேன்-அன்னூரில் கைதான வாலிபர் வாக்குமூலம்
    X

    மனைவி, மகன் சிகிச்சைக்காக திருடினேன்-அன்னூரில் கைதான வாலிபர் வாக்குமூலம்

    • 8 வருடங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியில் வீட்டுமனை வாங்க ஒருவரிடம் மாத தவணையாக பணத்தை கட்டினேன்.
    • போலீஸ் நிலையங்களில் பொய்புகார் கொடுத்து என்மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்ய வைத்தார்.

    கோவை :

    அன்னூரில் சத்தி சாலையில் ஜெயகுமார் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், தான் வங்கியின் மேலாளர் என்று கூறி 2 பவுன் தங்க செயினை திருடி கொண்டு தப்பியோடிவிட்டார்.

    இதுகுறித்து அன்னூர் போலீசில் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார், நகைக்கடைக்கு சென்று, அங்குள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் வாலிபரின் முகம் தெளிவாக பதிவாகி இருந்தது. இதையடுத்து, போலீசார் அதனை வைத்து அவரை தேடினர்.

    அன்னூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்த போது, அவர் சென்னையை சேர்ந்த ரவி என்ற சீசிங் ரவி(வயது 40) என்பதும், எம்.பி.ஏ. பட்டதாரி என்பதும் தெரியவந்தது. இவர் தான் அன்னூரில் நகைக்கடையில் நகையை திருடி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பவுன் செயின் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    போலீசாரிடம் ரவி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் கோபி நீதிமன்றம் எதிரே உணவு கடை நடத்தி வந்தேன். 8 வருடங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியில் வீட்டுமனை வாங்க ஒருவரிடம் மாத தவணையாக பணத்தை கட்டினேன். ஆனால் அவர் மோசடி செய்து விட்டார்.

    சட்டப்படி நடவடிக்கை எடுக்க போவதாக அவரை எச்சரித்ததால் என்மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பொய்புகார் கொடுத்தார். அதன்பேரில் என்மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்ய வைத்தார். இதனால் நான் சிறைக்கு சென்றேன். இதனால் மனைவி பிரிந்து செ்னறார். எனது வாழ்க்கையும் மாறிவிட்டது.

    சிறையில் இருந்தபோது, தேனியை சேர்ந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு 2 பேரும் ஒன்றாக வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டோம்.

    பின்னர் நான் 2-வது திருமணம் செய்து கொண்டேன். மீண்டும் கோபில் உணவகம் நடத்தினேன்.இதற்கிடையே எனது 2-வது மனைவி, மகன் நோயால் பாதித்ததால் சிகிச்சைக்காக வட்டிக்கு பணம் பெற்றேன். ஆனால் அதுவும் போதவில்லை. இதையடுத்து நகை திருடி சம்பாதிக்க ஆசைப்பட்டு, நகைக்கடையில் திருடினேன். அப்போது தான் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×