search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாயர்புரத்தில் மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டிகள்
    X

    போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி.

    சாயர்புரத்தில் மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டிகள்

    • மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகள் சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
    • போட்டிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி ஸ்பார்டன்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடமி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கராத்தே அசோசியேஷன் ஆகியவை இணைந்து நடத்திய 5-வது ஆண்டு மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகள் சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    தமிழக மீனவளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டி களை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஆறுமுக பெருமாள், முக்காணி கூட்டுறவு வங்கி தலைவர் உமரி சங்கர், சாயர்புரம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டாரம், தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் மத்திய பகுதி பி.ஜி.ரவி, மேற்கு கொம்பையா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், சாயர்புரம் பேரூராட்சி தலைவி பாக்கிய லெட்சுமி, அறவாழி, பேரூர் செயலா ளர்கள் ஏரல் ராயப்பன், சாயர்புரம் கண்ணன், பெருங்குளம் நவநீத முத்துக் குமார், ஸ்ரீவைகுண்டம் சுப்புராஜ், மாவட்ட பிரதி நிதிகள் பேய்க்குளம் ஜெயக் குமார், அருண் கிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் சண்முக ராஜா, குலையன் கரிசல் கூட்டுறவு வங்கி தலைவர் சுரேஷ், முன்னாள் சாயர் புரம் நகர செயலாளர் வரதராஜ் ஸ்டாலின், நடுவக் குறிச்சி நாராயணன், பழைய காயல் சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கராத்தே மற்றும் சிலம்பம் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கராத்தே முதன்மை மாஸ்டர் சுரேஷ் குமார் தலைமையில் கராத்தே மாஸ்டர்கள் பாட்ஷா, கணேஷ்குமார், முகில் மாறன், திலீப் மற்றும் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×