search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மாநில அளவிலான சிலம்ப போட்டி
    X

    கோவையில் மாநில அளவிலான சிலம்ப போட்டி

    • தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • 1500 சிலம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.

    அன்னூர்,

    சிலம்ப கலையை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட, மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து 4-வது ஆண்டாக மாநில அளவிலான போட்டிகள் கோவையை அடுத்த கரியாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, தர்மபரி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற இதன் தொடக்க விழாவில், சிலம்பம் அசோசியேஷன் ஆப் இந்தியா பொது செயலாளர் , தொழில் நுட்ப இயக்குனர் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி தலைவர், செயலாளர், தனியார் கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆசான், இந்துஸ்தான் ஸ்கவுட்ஸ் அண்டு கைட்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பா.ஜ.க.கோவை மாவட்ட தலைவர் கலந்து கொண்டு போட்டிகளை தொடக்கி வைத்தார். போட்டிகளில்,4 வயது முதல்,மழலையர், மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என 45 வயது வரையிலான இரு பாலர் பிரிவினரும் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1500 சிலம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர். இதில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் லக்னோவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×