என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை ஸ்ரீ சாரதா கல்வி நிறுவனத்தில் சிறப்பு வழிபாடு
    X

    சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    நெல்லை ஸ்ரீ சாரதா கல்வி நிறுவனத்தில் சிறப்பு வழிபாடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீ சாரதா கல்வி நிறுவனத்தில் சிவ வழிபாடு நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை, ஸ்ரீ சாரதா கல்வி நிறுவனத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முதல் நாள் சிவ வழிபாடும், 2-ம் நாள் அம்பிகை வழிபாடும், 3-வது நாள் மகாவிஷ்ணு வழிபாடும் நடைபெற்றது.

    கல்லூரிச் செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா மேற்பார்வையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில், பள்ளிச் செயலர் யதீஸ்வரி தவப்பிரியா அம்பா, கல்லூரி கல்வி இயக்குநர் சந்திரசேகரன், கல்லூரி முதல்வர் கமலா, கல்வி யியல் கல்லூரி முதல்வர் பாக்கியலட்சுமி, பள்ளி முதல்வர் சுந்தர லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிவன் வழிபாட்டில் ஸ்ரீ சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரிச் செயலர் யதீஸ்வரி துர்காப்ரியா அம்பா பக்தி அறிவுரை யாற்றினார். ஸ்ரீ சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியைகள் உமா மகேஸ்வரி, "தம்பிரான் தோழர் சுந்தரர்" என்ற தலைப்பிலும், செல்லம்மாள் "மாணிக்கவாசகரும் திருவாசகமும்" என்ற தலைப்பிலும் சிறப்பு சொற்பொழிவாற்றினர்.

    ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் முத்துராணி "திருமந்திரம் வலியுறுத்தும் சிவ வழிபாடு" குறித்து சிறப்பு சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியில் ஸ்ரீ சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரி மாணவிகள் 'சிவபுராண மகாத்மியம்' நாடகம் நிகழ்த்தி னர். தொடர்ந்து ஸ்ரீ சாரதா பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும் அரங் கேற்றப்பட்டது.

    அம்பிகை வழிபாட்டில் திருப்பராய்த்துறை, ஸ்ரீ ராமகிருஷ்ண தபோ வனத்தின் செயலர் சுவாமி சத்யானந்தர் பக்தி அறிவுரை வழங்கினார். ஸ்ரீ சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியை மகாலட்சுமி "காஞ்சி காமாட்சி" என்னும் தலைப்பி லும் சிறப்புரை யாற்றினர்

    ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி கணினிப் பயன்பாட்டியல் துறை இயக்குநர் மற்றும் உதவிப்பேராசிரியர் மாலினி "அம்பிகையின் மகிமை" என்ற தலைப்பிலும், ஸ்ரீ சாரதா வித்யாலயா உயர்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மகேஸ்வரி "ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி" என்ற தலைப்பிலும் சிறப்பு சொற்பொழிவாற்றினர்.

    மகாவிஷ்ணு வழிபாட்டில் திருப்புனவாசல் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன சுவாமி அக்ஷரானந்தர் பக்தி அறிவுரை வழங்கினார். ஸ்ரீ சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உயிரியல் ஆசிரியை பரமேஸ்வரி "நம்மாழ்வாரும் மதுர கவியாழ்வாரும்" என்ற தலைப்பிலும், கணித ஆசிரியை ஐஸ்வர்யா "சத்திய நாராயண விரத மகிமை" குறித்தும் சிறப்பு சொற்பொழிவாற்றினர்.

    அதனைத்தொடர்ந்து சாரதா மகளிர் கல்லூரி வணிக நிறுவன செயல்பாட்டு துறை உதவிப்பேராசிரியர் சுகன்யா "விஷ்ணுவின் அவதார மகிமை"குறித்து சொற்பொழிவாற்றினார்.

    சிறப்பு வழிபாட்டின் 3 நாட்களும் நாம அர்ச்சனை, ஆரத்தி, தியானம், பஜனை நடைபெற்றது.கலந்து கொண்ட பக்தர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது.

    Next Story
    ×