search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடிப்பெருக்கையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் பெண்கள் சிறப்பு வழிபாடு
    X

    நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.

    ஆடிப்பெருக்கையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் பெண்கள் சிறப்பு வழிபாடு

    • ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த நாட்களுக்கு எல்லாம் மகுடமாக இருப்பது ஆடிப்பெருக்கு நாள் ஆகும்.
    • தாமிரபரணி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.

    நெல்லை:

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த நாட்களுக்கு எல்லாம் மகுடமாக இருப்பது ஆடிப்பெருக்கு நாள் ஆகும். ஆடிப்பெருக்கு என்றால் ஆடி மாதம் 18-ந்தேதியை குறிக்கும்.

    இந்த நாளில் பெண்கள் தங்களது கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி ஆற்றங்கரை யோரம் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். பெண் குழந்தைகளுக்கு கழுத்திலும், ஆண்களுக்கு கையிலும் மஞ்சள் கயிறு கட்டி விடுவார்கள்.

    திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர். இதன் மூலமாக அவர்களுக்கு அடுத்த ஆடி மாதத்திற்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளான இன்று நெல்லை டவுன் குறுக்குத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தாமிரபரணி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.

    தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். இதைத் தொடர்ந்து பெண்கள் நதிக்கரைகளில் தாலி பிரித்து கோர்த்தனர். இளம் வயது பெண்கள், சுமங்கலி பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×