search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி சார்பில்  சிறப்பு கருத்தரங்கம்
    X

    ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி சார்பில் சிறப்பு கருத்தரங்கம்

    • பாளை திருமால்நகர் மாநகராட்சி பூங்கா நூலகத்தில் தற்சார்பு வாழ்க்கை முறை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • கருத்தரங்கில் திருமால் நகரை சார்ந்த பெண்கள் பங்கு பெற்றனர்.

    நெல்லை:

    நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியின் சமூக பணித்துறை சார்பில் பாளை திருமால்நகர் மாநகராட்சி பூங்கா நூலகத்தில் தற்சார்பு வாழ்க்கை முறை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக இந்திரா பொன்னையா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்சார்பு வாழ்க்கை முறை என்பது நம் சொந்த தேவைகள் மற்றும் நம் குடும்பத்தின் தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வது ஆகும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பருப்பு பொடி, சமையலுக்கு உபயோகப் படுத்தும் மசாலா பொருட்கள் இது போன்ற வைகளை நாம் வெளியே இருந்து வாங்காமல் நம் வீட்டில் செய்து உபயோகிப்பதன் மூலமாக நம் ஆரோக்கியத்தையும் நாம் பேணி காக்கலாம் என்றார்.

    கருத்தரங்கில் திருமால் நகரை சார்ந்த பெண்கள் பங்கு பெற்றனர். ஏற்பாடு களை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி சமூக பணித்துறை மாணவி வரலெட்சுமி செய்திருந்தார்.

    Next Story
    ×