என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில் அம்மனுக்கு வளையல் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை
    X

    உடன்குடியில் அம்மனுக்கு வளையல் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆடிப்பூரத்தை முன்னிட்டு குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி 108திருவிளக்கு பூஜை நடந்தது.
    • சிவல் விளை புதூர் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும் பக்தர்களுக்கு வளையல் பிரசாதம் வழங்கினர்

    உடன்குடி:

    உடன்குடி அருகே காரங்காடு சிவசந்தடி–யம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழாவையொட்டி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வளைகாப்பு பொருட்கள் பக்தர்களால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தொடர்ந்து கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.

    மேலும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி 108திருவிளக்கு பூஜை நடந்தது.திருமணமான பெண்களுக்கு பெண்மணி ஒருவர் வளைகாப்பு விழா நடத்துவதாக பாவித்து பெண்களுக்கு குங்குமம், மஞ்சலிட்டு, வளையல்கள் அணிவித்து வளைகாப்பு விழா நடந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான திருமணமான பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில்நிர்வாகத்தினர் செய்திருந்தனர். உடன்குடிசந்தையடியூர் முத்தாரம்மன் கோவில், பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில், கொட்டங்காடு பத்ரகாளி அம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில்அம்மனுக்கு வளையலால் அலங்காரம் செய்யப்பட்டுசிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கினர்.உடன்குடி வடக்கு காலன் குடியிருப்பு, சிவல் விளை புதூர் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும் பக்தர்களுக்கு வளையல் பிரசாதம் வழங்கினர்.உடன்குடி அருகே பிறை குடியிருப்பு தேவி முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.

    Next Story
    ×