என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடந்தபோது எடுத்த படம்.
சிறப்பு மருத்துவ முகாம்
- தட்டார்மடம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
- இதில் சுமார் 90 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட த்தின் சார்பாக தட்டார்மடம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. இதில் சுமார் 90 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
5-ம் நாளில் கண் பரிசோதனை, இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. தட்டார் மடத்திலுள்ள ஏஞ்சல் நகரில் அமைந்துள்ள தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையின் டாக்டர் முகமது தலைமையில் கண் மருத்துவ முகாமும், நெல்லை அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் டாக்டர் அருணாச்சலம் தலைமையில் இலவச இருதய பரிசோதனை முகாமும் நடைபெற்றது.
முகாமை தட்டார்மடம் அண்ணாள் நகர் பங்குத்தந்தை ஜோசப் கலைச்செல்வன் ஆசீர் வழங்கி தொடங்கி வைத்தார். ஊர் நலப் பொருளாளர் மகேஷ் ராஜா உடனிருந்தார். அனைத்து இந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவை, தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டார். கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களான உமா பாரதி, பேராசிரியை வளர்மதி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






