search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வட்டாரத்தில் பயிர் சாகுபடி சிறப்பு திட்டம் தொடக்கம்
    X

    பரமத்தி வட்டாரத்தில் பயிர் சாகுபடி சிறப்பு திட்டம் தொடக்கம்

    • தரிசாக உள்ள நிலங்களில் பயறு வகை பயிர்களான, உளுந்து, பாசிபயறு சாகுபடி செய்ய சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
    • இத்திட்டத்தின் மூலம் உளுந்து விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் நெல் சாகுபடிக்கு பின், தரிசாக உள்ள நிலங்களில் பயறு வகை பயிர்களான, உளுந்து, பாசிபயறு சாகுபடி செய்ய சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உளுந்து விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.பயறு வகை சாகுபடி செய்வதால், சாகுபடி செலவு குறைவாகவும், 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும்.ஒரு ஏக்கருக்கு, 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பயறு வகை பயிர்கள் பயிரிடுவதால் மண் வளம் மேம்படுகிறது. இப்பயிர்கள் வாயு மண்டலத்திலுள்ள நைட்ரஜன் சத்தை மண்ணில் நிலை நிறுத்துகிறது. இதன் வாயிலாக, மண் வளம் அதிகரித்து, அடுத்து பயிர் சாகுபடியின் போது, விளைச்சல் அதிகரிக்கிறது.எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்து பயன்பெறுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×