search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நதிநீர் இணைப்பு திட்டத்துக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க சிறப்பு முகாம்கள்- கலெக்டர் கார்த்திகேயன் தகவல்
    X

    நதிநீர் இணைப்பு திட்டத்துக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க சிறப்பு முகாம்கள்- கலெக்டர் கார்த்திகேயன் தகவல்

    • நில உரிமையாளர்கள் தங்களது ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
    • 15-ந்தேதி மேலச்செவல் உள்ளிட்ட ஊர்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, கருமேனி ஆறு, நம்பியாறு இணைப்பு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நில உரிமையாளருக்கு இழப்பீடு

    நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டு உள்ள நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் நில உரிமையாளர்கள் தங்களது பட்டா நகல், வில்லங்கச் சான்று, கிரைய ஆவணம், மூல ஆவணம், வாரிசு அடிப்படையில் பெற்ற நிலமெனில் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

    சிறப்பு முகாம்கள்

    இன்று (செவ்வாய்க்கிழமை) கொழுமடை, தோட்டாக்குடி, தருவை, ராமகிருஷ்ணாபுரம் ஆகிய ஊர்களில் முகாம் நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) புதுக்குடி, மேலத்திடியூர், கஸ்தூரிரங்கபுரம் ஆகிய ஊர்களிலும், 9-ந் தேதி கேசவசமுத்திரம், அ.சாத்தான்குளம், புதுக்குளம், காடன்குளம், திருமலாபுரம், விஜயநாராயணம் பகுதி-1, உறுமன்குளம் ஆகிய கிராமங்களிலும், 10-ந் தேதி பத்தமடை, கோவன்குளத்திலும் முகாம்கள் நடைபெறுகின்றன.

    13-ந்தேதி பிரான்சேரி, குறவர்குளம், திருவெம்பலாபுரம், 14-ந்தேதி தெற்கு வீரவநல்லூர் பகுதி -2, பருத்திப்பாடு, செங்குளம், முனைஞ்சிப்பட்டி.

    மூலைக்கரைப்பட்டி- விஜயநாராயணம்

    15-ந்தேதி மேலச்செவல், பொன்னாக்குடி, இலங்குளம், 16-ந்தேதி புதுக்குடி, ஆழ்வானேரி, தருவை, ராமகிருஷ்ணாபுரம், விஜயநாராயணம், உறுமன்குளம், 17-ந்தேதி தெற்கு வீரவநல்லூர் பகுதி -1, மூலைக்கரைப்பட்டி, மேலத்திடியூர், கோவன்குளம் ஆகிய ஊர்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

    20-ந்தேதி கொழுமடை, தோட்டாக்குடி, புதுக்குளம் திருவலாபுரம் 21-ந் தேதி பிரான்சேரி, அ.சாத்தான்குளம், குறவர்குளம், காடன்குளம், திருவெம்பலாபுரம், விஜயநாராயணம் பகுதி -1, கஸ்தூரிரங்கபுரம்,

    23-ந்தேதி பத்தமடை, பருத்திப்பாடு, ராமகிருஷ்ணாபுரம், விஜயநாராயணம் பகுதி-1, இலங்குளம், தெற்கு வீரவநல்லூர் -2 ஆகிய ஊர்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×