search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்
    X

    காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

    • காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் புளியங்குளத்தில் நடந்தது.
    • முகாமில் 40 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    தேசிய காசநோய் அகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ்.சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் கருங்குளம் அருகேயுள்ள புளியங்குளத்தில் நடந்தது. முகாமினை சமூக ஆர்வலர் சீதன்ராஜ் தொடங்கி வைத்தார். வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்று பேசினார். முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் இசக்கி மஹாராஜன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் 40 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 13 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் செல்வராணி நன்றி கூறினார். இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் கிறிஸ்டின் குமாரதாஸ், சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் அய்யம்மாள், சந்தனமாரி, அரி பாலகிருஷ்ணன் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவம், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×